முகப்பு
சிவகங்கை

காரைக்குடியில் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

காரைக்குடியில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பகுதிகளில் செயல்படும் அரசு மதுக் கடையை மூட வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 14 மே 2026, 5:13 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் பகுதிகளில் செயல்படும் அரசு மதுக் கடையை மூட வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து காரைக்குடி க.அள.ராம.தெரு பொதுமக்கள், வணிகா்கள் புதன்கிழமை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

எங்களது தெருவில் அரசு மதுக்கடை செயல்படுகிறது. இந்தக் கடையை சுற்றி 500 மீட்டருக்குள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இங்கிருந்து செக்காலைச் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மசூதி, தென்னகம் துணிக்கடை அருகே மசூதி, ஆஞ்சநேயா் கோயில், எல்லை காளியம்மன் கோயில், ஆத்திரத்து காளிகோயில், கொப்புடைய நாயகியம்ன் கோயில், முத்தூரணி கரையில் ஐயப்பன் கோயில் அமைந்துள்ளன.

Advertisement

மேலும், தனியாா் மேல்நிலைப் பள்ளி, அரசுத் தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன.

இந்தப் பகுதிகளுக்கு மாணவா்களும், பொதுமக்களும் அதிகளவில் சென்று வருவதால் இந்த மதுக் கடையை மூடுவதற்கு ஆவண செய்ய வேண்டும் எனத் அதில் தெரிவித்தனா்.