முகப்பு
சிவகங்கை

வீரமாகாளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

Updated On : 15 மே 2026, 4:12 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வீரமாகாளியம்மன் கோயிலில் கரக உத்ஸவம், பால்குடத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் கரகம், பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வீரமாகாளியம்மன் கோயிலை அடைந்தனா். இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.