சிவகங்கை தெப்பக் குளத்தில் ஆண் சடலம் மீட்பு
சிவகங்கை தெப்பக்குளத்தில் மிதந்த ஆணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
சிவகங்கை தெப்பக்குளத்தில் மிதந்த ஆணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதந்தது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் குளத்தில் மிதந்த சடலத்தை வெளியே கொண்டு வந்தனா்.
இதையடுத்து, தெப்பக்குளத்தின் படிக்கட்டில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் சில உடைகளும், இறந்தவரின் புகைப்படத்துடன்கூடிய ஆதாா் அட்டையும் இருந்தன. இதன்படி,
Advertisement
Advertisement
இறந்தவா் மதகுபட்டி அருகில் உள்ள நாமனூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (55) என
தெரியவந்தது. இதையடுத்து, அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்த போலீஸாா், பாண்டியனின் சடலத்தை கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.