தேனி

சின்னமனூரில்  20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பிலிருந்த சிக்கிய கோயில் இடம் மீட்பு

DIN

சின்னமனூரில் 20 ஆண்டுகளாக தனியார் பிடியில் சிக்கியிருந்த கோயில் இடத்தை வியாழக்கிழமை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
   சின்னமனூர் பூலானந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான காலிமனை அதே பகுதியைச் சேர்ந்த செல்வ நாயகம்மாள் என்பவருக்கு கடந்த 40 ஆண்டுக்கு முன் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது இவருடைய வாரிசுதாரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த காலிமனை இடத்திற்கு கடந்த   1997 ஆம் ஆண்டிலிருந்து வாடகை பாக்கி செலுத்தவில்லை. 
இதனால் ரூ.30 லட்சம் வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை  உயர் நிதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குதொடர்ந்தனர். இவ்வழக்கில், விசாரணை செய்து உரிய  
நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட இணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் அய்யம் பெருமாள், கோயில் செயல் அலுவலர் அருள் செல்வம் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் காலிமனை இடம் கைப்பற்றப்பட்டது.
     ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள காலிமனை இடமானது ரூ.55 லட்சம் மதிப்பு கொண்டதாகும். சுமார் 5,385 சதுர அடி காலிமனையை இடத்தை கையகப்படுத்திய அதிகாரிகள் அதை பூட்டி சீல் வைத்தனர். அதில் அத்துமீறி நூழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT