தேனி

லட்சுமிபுரம் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் புதன்கிழமை பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  லட்சுமிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி பெயரில் உள்ள கிணற்றை லட்சுமிபுரம் கிராமத்துக்கு  வழங்கவேண்டும் எனக் கூறி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
 இந்நிலையில் அங்குள்ள வறட்டாற்றை  வறட்டு ஓடை என பொதுப்பணித்துறையினர் மாற்றியுள்ளதாகக் கூறி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அதன் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் முன்அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 99 ஆண்கள், 300 பெண்கள் மீது தென்கரை காவல்நிலையத்தில் புதன்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT