தேனி

சின்னமனூர் பகுதியில் கருகும் வாழை மரங்கள்: விவசாயிகள் கவலை

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாழைகள் காய்ந்து கருகுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெறுகிறது.
தற்போது பருவமழை பொய்த்ததால் விவசாயத்தின் பரப்பளவு பாதியாக குறைந்து விட்டது. இந்நிலையில் கோடை வெப்பம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் கருகத் தொடங்கியுள்ளன.
குழை தள்ளிய நிலையில் வெப்பத்தால் வாழைக்காய்கள் காய்ந்து உதிர்த்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் வறட்சி நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT