தேனி

கம்பம் அருகே ஒரு வாழைக்குலையில் 2 வாழைத்தார்கள்

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் ஒரு வாழைக்குலையில் இரண்டு வாழைத்தார்கள் விளைந்துள்ளன.
 உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் நத்தர்மீரான். வாழை விவசாயியான இவருக்கு சுருளிப்பட்டியில் வாழைத் தோட்டம் உள்ளது. இங்கு இவர் ஜி- 9 ரக வாழை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த தோட்டத்தில் ஒரு வாழை மரத்தில் ஒரே குலையில் இரண்டு வாழைத்தார்கள் விளைந்திருந்தன. இதுகுறித்து விவசாயி நத்தர்மீரான் கூறியதாவது:  மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் இருந்து வாங்கி வந்த புதிய ரக வாழைக்கன்றுகளை 8 மாதங்களுக்கு முன்னர் சாகுபடி செய்தோம். நல்ல விளைச்சல் இருந்தது. இதில் ஒரே குலையில் இரண்டு வாழைத்தார்கள் விளைந்துள்ளன. இது பற்றி புணேயில் உள்ள வாழை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT