தேனி

ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டப்படும் இடத்தை ஆட்சியர் ஆய்வு

DIN

ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டப்படும் இடத்தை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார்.
ஒட்டன்சத்திரத்தில் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல்- பழனி சாலை லெக்கையன்கோட்டை ஊராட்சி சேமிப்பு கிட்டங்கி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தையும், அதன் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான இடத்தையும் நீதிமன்றங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் பொ.மாரிமுத்து,துணை வட்டாட்சியர் எம்.முத்துச்சாமி, வட்ட துணை ஆய்வாளர் சாய்ராம்ஷா,வருவாய் அலுவலர் முத்துக்குட்டி ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT