தேனி

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்கிறது

DIN

நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், முல்லைப் பெரியாறு அணையின்  நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
கடந்த ஒரு மாதமாக முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 112.50 அடியாக  இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து, சனிக்கிழமை  நீர்மட்டம் 113.60 அடியானது.
சனிக்கிழமையும்  அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 114.26 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 1,593 மில்லியன் கன அடியாக உள்ளது. 
நீர்வரத்து வினாடிக்கு 1,721 கன அடியாக இருந்தது. இதனால் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீரை பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டனர். 
தண்ணீர் திறப்பு அதிகரித்ததால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT