தேனி

ஆண்டிபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

DIN

ஆண்டிபட்டி அருகே உள்ள க.விலக்கில் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டியை அடுத்து க.விலக்கு பகுதி அமைந்துள்ளது. வைகை அணை சாலை, வருசநாடு சாலை, தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலை என நான்கு சாலைகள் சந்திக்கும் இந்த இடத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தப்படவில்லை. 
இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேசிய நெடுஞ்சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கியிருப்பதால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், சாலை சேதமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, க.விலக்கு பகுதியில் நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT