தேனி

கம்பத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட  அளவிலான யோகாசனப் போட்டிகள்

DIN

கம்பத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யோகாசன அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு யோகாசன சங்க மாவட்ட துணைத்தலைவர் என்.எம்.ஹைதர்அலி தலைமை வகித்தார். இதில், பல்வேறு பிரிவுகளில், போட்டிகள் நடைபெற்றன.
சூப்பர் சீனியர் பிரிவில் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், நாகமணியம்மாள் மெட்ரிக். பள்ளி அணி இரண்டாம் இடமும் பெற்றன.
சீனியர் பிரிவில் உத்தமபாளையம் கிரஸண்ட் மெட்ரிக் பள்ளி, காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக். பள்ளியும், ஜூனியர் பிரிவில் கம்பம் அல்அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாலந்தா பள்ளியும், சப் ஜூனியர் பிரிவில், க.புதுப்பட்டி பேர்லேண்ட்ஸ் பள்ளி, கூடலூர் ஆர்.எஸ்.கே.மழலையர் பள்ளியும், சிறப்புப் பிரிவில் சின்னமனூர் காயத்ரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக். பள்ளியும் முன்னோக்கி வளைதல் பிரிவில் க.புதுப்பட்டி வீணா வித்யாலயா மெட்ரிக். பள்ளி, மழலையர் பள்ளியும், அமர்ந்த நிலை பிரிவில் உத்தமபாளையம் கிட்ஸீ, மவுண்ட் வுட் பள்ளி, பின்னோக்கி வளைதல் பிரிவில் போடி இசட். கே.எம். பள்ளி, விகாஸா மெட்ரிக். பள்ளியும், சமநிலை பிரிவில் ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப்பள்ளியும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றன.  
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவரவர் பள்ளியில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவிராம் தெரிவித்தார். 
முன்னதாக ரிஷி யோகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் துரை.ராஜேந்திரன் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT