தேனி

தேனியில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

DIN

தேனியில் வெள்ளிக்கிழமை லாட்டரி சீட்டு விற்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1.41 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தேனி, அல்லிநகரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் திருக்குமரன் (45), உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மகன் ஆனந்த் (23),  கல்யாணி மகன் பாலு(39) ஆகியோர் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தனராம். இதையடுத்து இவர்கள் மூவரையும் தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.33, 550 மதிப்பிலான 240 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1.41 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT