தேனி

தேனியில் காவலர் உடல் தகுதி  தேர்வுக்கு இலவச பயிற்சி

DIN

தேனியில் காவலர் போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு உடல் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி மார்ச் 16 ஆம் தேதி முதல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
   இது குறித்து மாவட்ட காவல் துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி 2-ஆம் நிலை காவலர், தீயணைப்போர் மற்றும் 2-ஆம் நிலை சிறைக் காவலருக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. போட்டித் தேர்வை அடுத்து நடைபெற உள்ள உடல் தகுதித் தேர்வுக்கு மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மார்ச் 16-ஆம் தேதி முதல், காலை 6 மணி முதல் 9 மணி வரை இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
     உடல் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, தேர்வு எண், செல்லிடபேசி எண் ஆகியவற்றை காவல் துறை பயிற்சி அலுவலர் செல்லிடபேசி எண்: 83000 44330-இல் கட்செவி அஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT