தேனி

போடி, உத்தமபாளையத்தில் வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

DIN

போடி, உத்தமபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
   இதில் வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பொங்கல் போனசை நாள் கணக்கில் கணக்கிட்டு வழங்க வேண்டும், ஜமாபந்தி படி வழங்க வேண்டும், இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு வழங்குவதை 30 சதவீதமாக உயர்த்தியும், அதற்கான பணிபுரிந்த காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக குறைத்தும் நிர்ணயம் செய்ய வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
     இந்நிலையில் வியாழக்கிழமை இக் கோரிக்கைகளை வலியுறுத்தி போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
        போடி வட்ட தலைவர் சுருளிவேல், துணைத்தலைவர் செல்வராஜ், வட்ட செயலர் சின்ன அழகிரி, வட்ட பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.   இதே போல் உத்தமபாளையத்தில் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரத் தலைவர்  அசோகன் தலைமையில்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT