போடி அருகே பாறையில் வழுக்கி விழுந்து இளைஞர் சாவு
போடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றைக் கடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
போடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றைக் கடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி, வெண்ணிமலை தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகன் பிருதிவிராஜ் (23). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை தோட்ட வேலைக்கு செல்வதற்காக ஊத்தாம்பாறை அருகே கத்தாழம்பாறை பகுதிக்கு சென்றுள்ளார். இவருடன் மேலும் 2 பேர் சென்றுள்ளனர். ஊத்தாம்பாறை ஆற்றை கடந்து சென்றபோது மற்ற தொழிலாளர்கள் கடந்து விட்ட நிலையில், பிருதிவிராஜ் கடக்கும்போது பாறையில் வழுக்கி தண்ணீரில் விழுந்து விட்டார். இதனை கவனிக்காத தொழிலாளர்கள் அவரை காணாமல் திரும்பி வந்து பார்த்துள்ளனர்.
அப்போது தண்ணீரில் ரத்தம் தெரியவே அப்பகுதியில் தண்ணீரில் தேடியபோது தலையில் அடிபட்டு பிருதிவிராஜ் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.