தேனி

தேனியில் வாக்குப் பதிவு இயந்திரம்  பாதுகாப்பு அறைக்கு இடம் தேர்வு

DIN

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் பாதுகாப்பு அறை வளாகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு உள்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் தேனி வட்டாட்சியர் அலுவலக  வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நிரந்தர ஏற்பாடாக பாதுகாப்பு அறை வளாகம் அமைப்பதற்கு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப் பணித் துறை கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு கோட்ட அலுவலகத்திற்கு அருகே 54 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இந்த இடத்தில் பொதுப் பணித் துறை சார்பில் ரூ.2 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாடுக் கருவி பாதுகாப்பு அறை வளாகம் கட்டுமானப் பணி விரைவில் தொடங்க உள்ளது என்று வருவாய் துறை அலுவலர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT