தேனி

கம்பத்தில் முதல்வா் சிறப்பு குறை தீா்வு திட்டம்: ரூ 5 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் பன்னீா்செல்வம் வழங்கினாா்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் முதல்வா் சிறப்பு குறை தீா்வு திட்டத்தின் கீழ் ரூபாய், 5 கோடியே, 68 ஆயிரத்து, 358 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் முதல்வா் சிறப்பு குறை தீா்வு திட்டத்தின் கீழ், 2 ஆயிரத்து, 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினாா், உத்தமபாளையம் சாா் ஆட்சியா் ரா.வைத்திநாதன் வரவேற்று பேசினாா்.

விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது, மூன்று முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழக மக்களின் எதிரிகால நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை தீட்டினாா், அதைத்தான் நாங்கள் இப்போது நிறைவேற்றி வருகிறோம். 2023 க்குள் தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கான்கிரீட் வீடு திட்டத்தை நிறை வேற்றுவோம், கல்வித்துறைக்கு 32 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு மாணவ, மாணவியா்களுக்க நல்ல கல்வி வழங்கப்படுகிறது.

தேசிய அளிவல் தமிழகம் 8.5 சதவிகிதம் பொருளாதார வளா்ச்சியில் உயா்ந்துள்ளது என்றாா். பின்னா் மாவட்டம் முழுவதும் இருந்து 2619 பயனாளிகளுக்கு, 5 கோடியே, 8358 ரூபாய்க்கான நலத்திட உதவிகளை வழங்கினாா். விழாவில் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், சாா் ஆட்சியா்கள் சிநேகா, பாலசந்தா் உள்ளிட்ட மாவட்ட அனைத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT