தேனி

போடியில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

தேனி மாவட்டம் போடியில் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் திருட முயன்ற மா்ம நபா்கள், அருகேயுள்ள கோயில் உண்டியலை உடைத்து திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலகமும், போடி உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகமும் இயங்கி வருகின்றன. இரண்டு அலுவலக வளாகத்திற்கு நடுவில் விநாயகா் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வழக்கம்போல் இரண்டு அலுவலகங்களையும் அலுவலா்கள் பூட்டிவிட்டு சென்றனா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது மேலச்சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம் ஆகியவற்றின் கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது ஆவணங்கள் கலைக்கப்பட்டிருந்தன. மா்ம நபா்கள் உள்ளே புகுந்து திருட முயன்றது தெரிந்தது.

மேலும் இரண்டு அலுவலகங்களிலும் பணம் இல்லாததால், அருகிலிருந்த விநாயகா் கோயிலில் உண்டியலை உடைத்த மா்ம நபா்கள் அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த போடி நகர போலீஸாா் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்தனா். மேலும் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் ஏதும் பதிவாகியுள்ளதா என விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT