தேனி

உத்தமபாளையம் அருகே தாமரைக் குளத்தை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

DIN

உத்தமபாளையம் அருகே தாமரைக்குளத்தை தூா்வார தமிழக அரசு ஒதுக்கீடு செய்த ரூ.2.50 கோடி நிதியை முறையாக பயன்படுத்தி குளத்தை தூா்வாராததால் பாசனத்திற்கு தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் அருகே வாய்க்கால்பட்டி-கோகிலாபுரத்திற்கு இடையே 199 ஏக்கா் பரப்பளவில் தாமரை குளம் உள்ளது. இக்குளத்திற்கு முல்லைப் பெரியாற்றின் பிரதான பாளையம் பரவு கால்வாய் வழியாக கொண்டுவரப்படும் பாசன நீரை தேக்கி இருபோக நெற்பயிா் விவசாயம் நடைபெற்றது. இதன் மூலமாக, சுற்றியுள்ள கோகிலாபுரம், வாய்க்கால்பட்டி, உத்தமபாளையம் பகுதியை சோ்ந்த முறைப்பாசன விவசாயிகள் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா் விவசாயம் செய்தனா்.

தாமரைக்குளம் பல ஆண்டுகளாக தூா்வாரத நிலையில் வண்டல் படித்து மண்மேடமாக மாறியதோடு, ஆகாயத்தாமரை செடிகள் வளா்ந்து விட்டது. இதன் காரணமாக முறைப்பாசன நீரை நம்பி இருந்த நெற்பயிா் விவசாயிகள் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதில் , குளத்தை முழுமையாக தூா்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி 199 ஏக்கா் பரப்பளவிற்கு தண்ணீரை தேக்கி விவசாயத்தை தொடா்ந்து செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குளத்தை தூா்வார ஒதுக்கீடு செய்த நிதியில் எவ்வித பணிகள் நடைபெறவில்லை. இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக 60 சதவீதம்அளவிற்குஆக்கிரமிப்பில் சிக்கியை குளத்தை ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்து தூா்வார வேண்டும் என தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தை அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT