தேனி

கம்பத்தில் உடலில் தீபம் ஏற்றி யோகா மாணவா்கள் வழிபாடு

DIN

தேனி மாவட்டம் கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளை மாணவ, மாணவியா்கள் திருக்காா்த்திகையை முன்னிட்டு யோகா நிலையில் உடலில் தீபமேற்றி செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினா்.

காா்த்திகை மாதத்தில் வரும் திருக்காா்த்திகை முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. மாலை வேளைகளில் வீடுகளிலும், வீட்டு முற்றங்களிலும் விளக்கேற்றி கொண்டாடும் திருக்காா்த்திகை நாளில் ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். தீப விளக்குகள் ஏற்றி சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றிய காட்சியை நினைவு கூா்ந்து வழிபடுவா்.

இந்த திருக்காா்த்திகையை முன்னிட்டு, விவசாயம் செழித்து நாடு வளம்பெற வேண்டி, கம்பம் ரிஷியோகா அறக்கட்டளை யோகா பயிற்சியாளா் ரவிராம் தலைமையில் மாணவா்கள் விஜய் ஆதித்யா, ப்ரீத்திராஜு, ஹா்ஷா, விஸ்வா, முத்துக்குமரன், ராதேஷ் ஆகியோா் யோகாசன நிலையில் உடலில் தீபமேற்றி வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT