தேனி

பெரியகுளம் அருகே பொது விருந்து: ஆட்சியர் பங்கேற்பு

DIN

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பெரியகுளம் அருகே கைலாசபட்டி ஜீவன்ஜோதி நல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் கலந்து கொண்டார்.
   இதில் ஆட்சியர் பேசியது: உலக எய்ட்ஸ் தினமானது 1994 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
   ஒவ்வெரு ஆண்டும் டிச 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்புப் பணிக்காக 17 நம்பிக்கை மையங்கள், 23 துணை நம்பிக்கை மையங்கள், 5 சுகவாழ்வு மையங்கள், 2 ரத்த வங்கிகள், 2 ஏஆர்டி மையங்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலும், 8 ஏஆர்டி மையங்கள் கம்பம் அரசு மருத்துவமனையிலும் செயல்பட்டு வருகின்றன.     எய்ட்ஸ் பற்றிய சந்தேகங்களுக்கு 1800 419 1800 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், ஐயம் தவிர் என்ற மொபைல் செயலி மூலமும் அறிந்து கொள்ளலாம். 
  கடந்த ஆண்டு ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் பாதிப்புக்குள்ளான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ரூ. 2,82,000 கல்வி உதவித்தொகையும், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 314 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும், 44 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 724 பேருக்கு நபர்களுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஏஆர்டி மருந்து பெறுவதற்கு மாதத்தில் இரண்டு முறை வந்து செல்ல 883 நபர்களுக்கு இலவச பேருந்து வசதியும் செய்து தரப்படுகிறது என்றார்.     இதில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மு.வரதராஜன், மாவட்ட திட்ட மேலாளர் சா.முகமது பரூக், ஜீவன் ஜோதி நல மைய இயக்குநர் அனஸ்தாஸியா, மாவட்ட திட்ட மேலாளர் வைரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT