முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே விவசாயிகள் சங்க  ஒருங்கிணைப்புக் கூட்டம்

ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:36 am IST
பகிர்:

ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.  
கூட்டத்துக்கு ஊர்பிரமுகர்கள் சிவஞானமூர்த்தி, கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வேலுச்சாமி, நாயுடு நலச்சங்கத் தலைவர் ஜெயராமன், தமிழ் விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வறட்சியால் பாதித்துள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 30 கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், கண்மாய், ஊருணிகளுக்கு தேவையான நீர் ஆதாரத்தை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்த திட்டங்களை விளக்கி தமிழ் விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் ராமராஜ், பட்டிமன்ற நடுவர் இளங்கோ உள்ளிட்டோர் பேசினர். ஒக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாராம் நன்றி கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.