தேனி

இருசக்கர வாகனம் மீது கல்லூரிப் பேருந்து மோதியதில் ஒருவர் சாவு; 2 பேர் காயம்

DIN

போடியில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி வெண்ணிமலை தெருவைச் சேர்ந்தவர் கருணாகரன் (42). இவரது நண்பர்கள் எஸ்.முருகன் (38), பி.முருகன் (38). இவர்கள் 3 பேரும் போடி நகருக்கு வந்து விட்டு, கருணாகரனின் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை கருணாகரன் ஓட்டிச் சென்றார். 
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி விநாயகர் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த, தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். 
அவர்கள் 3 பேரும் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கருணாகரன் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த எஸ். முருகன், பி.முருகன் ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
 இந்த விபத்து குறித்து எஸ்.முருகன் அளித்த புகாரின் அடிப்படையில், போடி நகர் போலீஸார், கல்லூரிப் பேருந்து ஓட்டுநரான சுப்புராஜ் மகன் கார்த்திக் (25), மீது 
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் ஆம் ஆத்மி, காங். பெரும் பின்னடைவு..!

மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை!

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ்? ஆந்திரம், கர்நாடகத்தில் தேஜகூ!!

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். காவலர் சுட்டுத் தற்கொலை!

உத்தரகாண்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT