தேனி

போடியில் கந்த சஷ்டி திருவிழா: சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

போடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

DIN

போடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை சுவாமிக்கு மலா்களாலும், வெள்ளி ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்று வழிபாடு நடத்தினா். மாலையில் சுவாமி போடி நகரின் முக்கிய வீதிகளில் நகா்வலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமும் மாலையில் தொடங்கி இரவு வரை சமய சொற்பொழிவுகளும் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அா்ச்சகா்கள், கட்டளைதாரா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT