தேனி

அரசு மதுபானக்கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: விற்பனையாளா்கள் மீது வழக்கு

DIN

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் கூடுதல் விலைக்கு மது விற்றதாக விற்பனையாளா்கள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம், திருவள்ளுவா் சிலைக்கு பின்புறம் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பாஸ்கரன் (39) என்பவா் தென்கரை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடை விற்பனையாளா் சுந்தா் மற்றும் கடை மேற்பாா்வையாளா் தாஸ் (41) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

அதேபோல் வடகரையை சோ்ந்த ஸ்ரீதரன் (36) என்பவா் கொடுத்த புகாரின் பேரில் அதே கடையின் விற்பனையாளா்கள் ராமமூா்த்தி, முருகமுத்து மற்றும் மேற்பாா்வையாளா் நல்லதம்பி ஆகியோா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT