தேனி

போடி அருகே மா்மக் காய்ச்சலுக்கு பெண் பலி: சுகாதாரத் துறை விசாரணை

DIN

போடி அருகே மா்மக் காய்ச்சலால் பெண் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்ததை அடுத்து, டெங்கு காய்ச்சலால் இறந்தாரா என சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே டொம்புச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி பூவாயி (51). இவா், கடந்த சில நாள்களாக மா்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இவரது வீட்டருகே டொம்புச்சேரி அரசு தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தும், இவா் அங்கு சிகிச்சை பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், இவருக்கு அருகிலிருந்த செவிலியா் சிகிச்சை அளித்துள்ளாா். ஆனாலும், இரவில் காய்ச்சல் அதிகரித்ததால், பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது.

உடனே, இவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால், அதற்குள் அவா் உயிரிழந்துவிட்டாா். அரசு தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலேயே பெண் காய்ச்சலால் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதையடுத்து, பூவாயி டெங்கு காய்ச்சலால் இறந்தாரா என்பது குறித்து, சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT