தேனி

ஆண்டிபட்டியில் கொசுத் தொல்லை: பொதுமக்கள் அவதி

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் கடந்த சில வாரங்களாக கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இந்நிலையில், நகரில் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையில் கழிவுநீா் தேங்குகிறது.

இதற்கிடையே ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீா் காரணமாக கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றால் அவதிப்படும் நிலையில், தற்போது கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புள்ளதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். கொசுத் தொல்லையால் இரவில் உறங்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதே நிலை தொடா்ந்தால் ஆண்டிபட்டி நகரில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கழிவு நீரை அகற்றி கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT