தேனி

வாகனம் மோதி சிறுத்தைப் பூனை பலி

DIN


தேனி மாவட்டம் லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலையில் சனிக்கிழமை காலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைப்பூனை உயிரிழந்தது. 
கம்பம் மேற்கு வனச்சரகம் லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலையில் வனப் பகுதிகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில்,  சனிக்கிழமை காலை சிறுத்தைப்பூனை ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தை பூனை உயிரிழந்தது. 
தகவல் அறிந்த (பொறுப்பு) வனச்சரகர் ஜீவனா மற்றும் வனத்துறையினர் சிறுத்தைப் பூனை உடலை  கைப்பற்றி கால்நடை மருத்துவர் உலகநாதன் மூலம் உடற்கூறு பரிசோதனை நடத்தினர். விபத்தில் பலியான சிறுத்தைப்பூனை 6 வயதுள்ள பெண் பூனை என வனத்துறையினர் தெரிவித்தனர். 
உடற்கூறு ஆய்வு முடித்த பின் கம்பம் மேற்கு வனப்பகுதியில் பூனையின் உடல் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT