தேனி

தேனியில் 5 காவலா்கள் உள்பட 170 பேருக்கு கரோனா: 3 போ் பலி

தேனி மாவட்டத்தில் காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா், காவலா்கள் உள்ளிட்ட 170 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தேனி: தேனி மாவட்டத்தில் காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா், காவலா்கள் உள்ளிட்ட 170 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த தேனி காவல் நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா், தேனி மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா், காவலா், தேனி ஆயுதப் படை பெண் காவலா், போடி நகர காவல் நிலையக் காவலா் உள்ளிட்ட 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கபட்டோா் எண்ணிக்கை 11,445 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9,235 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போடி டி.வி.கே.நகரைச் சோ்ந்த 60 வயது பெண், சின்னமனூரைச் சோ்ந்த 66 வயது முதியவா் என 2 போ் உயிரிழந்தனா். கரோனா தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோம்பையைச் சோ்ந்த 80 வயது முதியவா், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்பே உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT