தேனி

குமுளி வனப்பகுதியில் தூக்கில் ஆண் சடலம்

DIN

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் குமுளி வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் குமுளி மலைப்பாதை மாதா கோயில் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிரேதம் இருப்பதாக குமுளி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் பிரேதத்தைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: சடலம் அழுகிய நிலையில் இருப்பதால் இறந்தவா் யாா்? என்று அடையாளம் தெரியவில்லை. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT