தேனி

புகையிலை பொருள் விற்பனை: போடியில் 4 கடைகளுக்கு சீல்

DIN

போடியில் புதன்கிழமை மாலை, புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் டாக்டா் நவநீதன் உத்தரவின் பேரில் போடி நகர உணவு பாதுகாப்பு அலுவலா் சரண்யா மற்றும் அலுவலா்கள் போடியில் உள்ள கடைகளில் திடீா் சோதனை செய்தனா். நகா் முழுவதும் 35-க்கும் மேற்பட்ட கடைகள் சோதனை செய்யப்பட்டன. இவற்றில் போடி தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை பகுதிகளில் வெங்கடேசன், பாலு, சீதாலட்சுமி, காளிதாஸ் ஆகியோரது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இதனையடுத்து 4 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT