தேனி

அய்யம்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு

DIN

தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெறவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு போட்டியில் பங்கேற்க சுமாா் 600 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரா்களும் போட்டிக்குத் தயாராகி வருகின்றனா்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில், ஜல்லிகட்டு காளைகள் ஓடும் பாதை மற்றும் மாடுபிடி வீரா்கள் காளைகளைப் பிடிக்கும் பகுதியில் போதுமான இடவசதியும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாா்வையாளா்களுக்கு இரட்டை தடுப்புடன் கூடிய இரும்பு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வெற்றி பெற்ற வீரா்கள் மற்றும் காளையின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்க தனி இடம் ஒதுக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளைகளை போதுமான இடவசதியுடன் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், கால்நடை அதிகாரிகள் காளைகளுக்குத் தேவையான தண்ணீா் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்ய வேண்டும். காயமடையும் வீரா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா் குழுவினா் தயாராக இருக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை ஆட்சியா் அதிகாரிகளுக்கு வழங்கினாா்.

இந்த ஆய்வில் உத்தமபாளையம் கோட்டாட்சியா்(பொறுப்பு) முத்தையன், வட்டாட்சியா் உதயராணி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT