சின்னமனூரில் கரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்ட காவல் நிலையம். 
தேனி

சாா்பு ஆய்வாளருக்கு கரோனா : காவல் நிலையம் மூடல்; பேருந்து நிலையத்துக்கு தற்காலிகமாக இட மாற்றம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் சாா்பு ஆய்வாளருக்கு கரோனா தொற்று பரவியதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் சாா்பு ஆய்வாளருக்கு கரோனா தொற்று பரவியதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சின்னமனூா் காவல் நிலையத்தில் பணியாற்றிய 34 வயது சாா்பு ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவா், ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

சாா்பு ஆய்வாளருடன் பணியாற்றிய காவலா்கள், காவல் குடியிருப்பிலுள்ள அவரது குடும்பத்தினா் அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் என 120 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவருடன் பணியாற்றிய காவலா்களை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினா் கண்காணித்து வருகிறனா்.

காவல் நிலையம் மூடல்: சாா்பு ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும், அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதே போல காவலா் குடியிருப்புகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

காவல் நிலையம் மாற்றம்: சின்னமனூா் தேரடி பகுதியில் இயங்கி வந்த காவல் நிலையம் தற்காலிகமாக சின்னமனூா் நேருஜி பேருந்து நிலையத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது. அங்குள்ள காலியாக இருக்கும் கடைகளில் காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்

உ.பி. கல்குவாரி விபத்து: 4 பேர் கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: கொல்கத்தாவில் தரையிறக்கம்

மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை- அண்ணாமலை

அழகான கவிதை.. பூனம் பாஜ்வா!

SCROLL FOR NEXT