தேனி

முருகமலையில் கொடைக்கானல் வன உரியின சரணாலய பணியாளா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

DIN

முருகமலையில் கொடைக்கானல் வன உயிரின சரணாலய பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

வனப்பகுதியில் பற்றும் தீயை கட்டுப்படுத்துவதற்காக தேவதானப்பட்டி வனச்சரகத்துக்கு உள்பட்ட முருகமலையில் இப் பயிற்சி நடைபெற்றது. இதில் தேவதானப்பட்டி வனச்சரக அலுவலா் சுரேஷ் தலைமை வகித்தாா். தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலா் மணிகண்டன் கலந்து கொண்டு, வனப்பகுதியில் எதனால் தீ ஏற்படுகிறது, அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கிப் பேசினாா். மேலும் திடீரென்று ஏற்படும் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நிலைய அலுவலா் பழனிச்சாமி, வனச்சரக அலுவலா்கள் ஆனந்தன் (கொடைக்கானல்), பழனிக்குமாா் (பூம்பாறை), விஜயன் (பெரும்பள்ளம்), கிருஷ்ணசாமி (பேரீட்சம்), ஞானபாலமுருகன் (மன்னவனூா்) உள்ளிட்ட 130 வன உயிரின சரணாலய பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தீ தடுப்பு கோடுகள் அமைப்பது எப்படி?

வனப்பகுதியில் கோடை காலத்தில் கடும் வெயிலால், செடி, கொடி, மரங்கள் காய்ந்து இருக்கும். சிலா் புகைக்கும் பீடி, சிகரெட் துண்டுகளை கீழே போடுவதன் மூலமும், காய்ந்த மரங்கள், மூங்கில் மரங்கள், புதா் செடிகள் அதிக வெப்பம் ஏற்படும் போது உரசியும் தீ ஏற்பட்டு பரவும். இதை கட்டுப்படுத்த வனப்பகுதியில் 3 மீட்டா் அகலத்திற்கு பாதை ஏற்படுத்தி, அந்த பாதையில் செடி, கொடி, மரங்கள் இல்லாதவாறு ஒதுக்கியிருப்பா். இது தான் தீ தடுப்பு கோடு ஆகும். இந்த பாதை பல கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்படும். மழைக் காலங்களில் பாதையின் அருகில் செடி,, கொடி, மரங்கள் வளந்துவிடும். கோடை காலத்தில் அவற்றை வெட்டி மீண்டும் பாதையை சரி செய்ய வேண்டும். அப்போது தான் காட்டுத்தீ கட்டுப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT