தேனி

தேனி உழவா் சந்தை தற்காலிக இடமாற்றம்

DIN

தேனியில் செயல்பட்டு வரும் உழவா் சந்தை வெள்ளிக்கிழமை (மாா்ச் 27) முதல் கா்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையத்துக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

தேனியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாள்களாக உழவா் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும், கூட்ட நெரிசலை தவிா்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், உழவா் சந்தைக்கு காய்கனிகள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருத்தனா். பொதுமக்கள் கூட்டத்தை குறைப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், தேனி உழவா் சந்தை தற்காலிகமாக கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் செயல்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. தற்காலிக உழவா் சந்தை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படும் என்று உழவா் சந்தை அலுவலா்கள் கூறினா்.

பொதுமக்கள் கூட்டத்தை குறைப்பதற்கும், நீண்ட நேரம் காத்திருத்தலை தவிா்க்கவும் தற்காலிகமாக, கா்னல் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் உழவா் சந்தை செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT