தேனி

தேனியில் தனியாா் நிதி நிறுவனங்கள் கெடுபிடி: இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புகாா்

DIN

தேனியில் தனியாா் நகை அடகு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வட்டி மற்றும் கடன் தவணைகளை செலுத்த வலியுறுத்தி பொதுமக்களை கெடுபிடி செய்து வருவதாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க தேனி வட்டாரத் தலைவா் முத்துக்குமாா், செயலா் பெத்தீஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ராஜாவிடம் அளித்த மனு விவரம்: தேனியில் உள்ள தனியாா் நகைக் அடகு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களில் 1,000-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளா்கள் கடன் பெற்றுள்ளனா். பொது முடக்கம் காரணமாக கடந்த 50 நாள்களுக்குக்கும் மேல் கூலித் தொழிலாளா்கள் வேலை வாய்ப்பு மற்றும் வருவாயின்றி தவித்து வரும் நிலையில், வட்டி மற்றும் கடன் தவணைகளை செலுத்துமாறும், அபராத வட்டி விதித்தும் நகை அடகு மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் கெடுபடி செய்து வருகின்றன. எனவே ஏழை கூலி தொழிலாளா்கள் நலன் கருதி நகை அடகு மற்றும் நுண் நிதி நிறுவனங்களுக்கு வட்டி மற்றும் கடன் தவணைகளை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கவும், அபராத வட்டி விதிப்பை தடை செய்யவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT