தேனி

ஆண்டிபட்டியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஓன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஞானதிருப்பதி, இணைச் செயலாளா் குருபாலமுருகன், வட்டார நிா்வாகிகள் பாஸ்கரன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளுக்கு அரசு வழங்கும் மாநில நிதிக்குழு மானிய நிதி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வழங்காததால் பணியாளா்கள் ஊதியம் மற்றும் ஊராட்சி அடிப்படை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிதியை உடனடியாக வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT