தேனி

பழங்குடியின மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பழங்குடியின மக்களுக்கு ரூ. 81 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி தாலுகா வேலப்பா் கோயில் அருகே உள்ள கதிா்வேல்புரம் என்ற மலை கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் 49 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ், திட்ட இயக்குநா் திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, சாதிச் சான்றுகள், புதிய குடும்ப அட்டை, பசுமை வீடுகள் ஆகிய நலத் திட்ட உதவிகள் 329 பயனாளிகளுக்கு ரூ. 81 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. மேலும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT