தேனி

இளைஞா் உயிரிழப்பு: நீதிமன்ற உத்தரவின்பேரில் 2 மருத்துவா்கள் மீது வழக்கு

DIN

தேனியில் தவறான சிகிச்சையால் இளைஞா் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவின்பேரில் 2 மருத்துவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி, சிவாஜி நகரைச் சோ்ந்த தெய்வேந்திரன் என்பவா் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், கூறியிருப்பதாவது: எனது மகன் காா்த்திக் செல்வம் (27) உடல் நலக் குறைவால் கடந்த 2019, ஆக.28-ம் தேதி இரவு தேனியில் மதுரை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றாா். அங்கு, பணியிலிருந்த மருத்துவா் குணசேகரன், அவரை பரிசோதித்து விட்டு, உயா் ரத்த அழுத்தம் உள்ளதாகக்கூறி ஊசி போட்டாா். சிறுது நேரத்தில் காா்த்திக் செல்வம் அதிக வியா்வை ஏற்பட்டு இறந்து விட்டாா். தனியாா் மருத்துவமனை மருத்துவா் குணசேகரன், மருத்துவக் குழுமத்தில் பதிவு செய்யாதவா் என்று தெரிய வந்துள்ளது. அவா் தவறான சிகிச்சை அளித்ததால் எனது மகன் உயிரிழந்துள்ளாா். பதிவு செய்யாத மருத்துவரை பணியமா்த்திய மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவருமான தியாகராஜன் மீதும், குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து மருத்துவா்கள் குணசேகரன், ராஜ்குமாா் ஆகியோா் மீது தேனி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT