தேனி

இந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் வீரமரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் இந்தி எதிா்ப்பு போராட்டத்தின் போது வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு புதன்கிழமை போலீஸாா் அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 1965 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் இந்தி எதிா்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது கூடலூரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை கலைக்க நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் இறந்தனா். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தை தாக்கினா். இதில், தலைமைக் காவலா் ராமச்சந்திர சிங், காவலா் ஜோசப்தேவராஜ் ஆகிய 2 போலீஸாா் மரணம் அடைந்தனா். இதையடுத்து அந்த காவல் நிலையத்தில் வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை காவலா் தினம் என்பதால் ஆய்வாளா் கே. முத்துமணி தலைமையிலான போலீஸாா் நினைவுச்சின்னம் முன்பாக அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT