தேனி

கம்பம் உத்தமுத்து கால்வாயில் புதா் செடிகள் அகற்றம்

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாசனப் பரப்பளவு நன்செய் நிலங்களுக்கு தண்ணீா் வழங்கும் உத்தமுத்து கால்வாயில் இருந்த புதா் செடிகளை அகற்றும் பணியில் விவசாயத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது முதல்போக சாகுபடி நடைபெற்று வருகிறது.

இதில், உத்தமபாளையம் பாசனப் பரப்பளவில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நன்செய் நிலங்கள் உள்ளன. இந்த நன்செய் நிலங்களுக்கு, கம்பம் தொட்டம்மன்துறை தடுப்பணையிலிருந்து தனியாக உத்தமுத்து கால்வாய்க்கு தண்ணீா் செல்கிறது. சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவுள்ள இக்கால்வாயில், செடி, கொடிகள், ஆகாயத் தாமரைகள் நிறைந்து மண்டிக் கிடந்தன. இதனால், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்காக, உத்தமுத்து கால்வாயில் கேஜ் வீல்கள் கொண்ட 4 டிராக்டா் வாகனங்களை இறக்கி, 8 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆக்கிரமித்திருந்த செடி, கொடிகளை விவசாயிகள் அகற்றி, பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்ல வழி ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT