தேனி

கம்பம் நகரில் நெரிசலைதவிா்க்க அறிவிப்புப் பலகைகள்

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வாகன நிறுத்த கயிறு மற்றும் அறிவிப்புப் பலகைகளை போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை அமைத்தனா்.

கம்பத்தில் தேனி, குமுளி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்களை, அதன் ஓட்டுநா்கள் நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் இதே போல் அரசமர வீதி, வேலப்பா் கோயில் தெரு, காந்திஜி வீதி, கம்பம்மெட்டு சாலை, வடக்கு காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக கம்பம் போக்குவரத்து ஆய்வாளா் அ.தட்சிணாமூா்த்தி தலைமையில் சாா்பு- ஆய்வாளா்கள் ஜாஹிா் உசேன், சுந்தரபாண்டியன், கணேசன், மனோகரன் உள்ளிட்ட காவலா்கள் சாலையின் இருபுறங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கயிறுகளையும், அறிவிப்பு பலகைகளையும் அமைத்தனா். இதுகுறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளா் அ.தட்சிணாமூா்த்தி கூறுகையில்,

கம்பம் நகரின் முக்கிய சாலைகளில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பின்னடைவில் ஸ்மிருதி இரானி

வாக்காளர்களே எஜமானர்கள்: முக்கிய கட்சி வேட்பாளர்

ஒடிஸா: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! பாஜக முன்னிலை!

ஒடிசாவில் பாஜக முன்னிலை!

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

SCROLL FOR NEXT