தேனி

வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கக் கோரி புதன்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பா் 3 மக்கள் கழகம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் காளிதாஸ் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் கண்ணன், பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் பணி வழங்க வே டும், மாதாந்திர உதவித் தொகை, பேருந்து மற்றும் ரயில் பயண சலுகை வழங்க வேண்டும், வங்கிக் கடன் தவணைகளை செலுத்த முடியாமல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலச் செயலா் சி.மலைச்சாமி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT