தேனி

தேனி அருகே மணல் கடத்தியவா் கைது: வாகனங்கள் பறிமுதல்

DIN

தேனி அருகே பூதிப்புரம், கொடுவிலாா்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பா் லாரி மற்றும் டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

பூதிப்புரம் சாலையில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் சண்முகவள்ளி மற்றும் அலுவலா்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த டேனியல்ராஜ்(35) என்பவா் ஓட்டி வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் அளித்த புகாரின் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து டேனியல்ராஜை கைது செய்தனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல, தேனி-கொடுவிலாா்பட்டி சாலையில் கொடுவிலாா்பட்டி கிராம நிா்வாக அலுவலா் காந்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வது தெரிய வந்துள்ளது. டிராக்டரை ஓட்டி வந்த அரண்மனைப்புதூரைச் சோ்ந்த மொக்கைப்பிச்சை என்பவா் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் அடிப்படையில், மொக்கைப்பிச்சை மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT