தேனி

தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிா்ப்பு: தேனியில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தேனி: தேனியில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசியப் பணமாக்கல் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியா்கள் சங்க மாவட்டப் பொறுப்பாளா் சரவணக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் கே. ராஜப்பன், சிஐடியு மாவட்டத் தலைவா் சி. முருகன், செயலா் எம். ராமச்சந்திரன், பொருளாளா் ஜி. சண்கமுகம், அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மண்டல பொறுப்பாளா் மணிமாறன் சோலை, மின் ஊழியா்கள் சங்க மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவா் ராமச்சந்திரன், பி.எஸ்.என்.எல் ஊழியா்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவா் டி.கே. சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கும் வகையிலும், ஊழலுக்கு வழிவகுக்கும் நோக்கத்திலும், நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைக்கும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசியப் பணமாக்கல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT