தேனி

குமுளியில் பேருந்து நிலையம் இல்லாததால் பயணிகள் அவதி

DIN

கம்பம்: தமிழக- கேரள எல்லையான குமுளியில் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக இழுபறியில் உள்ளதால் தொழிலாளா்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சியின் 21 ஆவது வாா்டு பகுதியாக உள்ளது குமுளி. இங்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை இருந்தது. இங்கிருந்த அரசுப் போக்குவரத்து பணிமனையை லேயா் கேம்பிற்கு மாற்றி, இங்கு பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகளுக்கான பணிமனை லோயா்கேம்ப்புக்கு மாற்றப்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும், குமுளியில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் நெடுஞ்சாலையிலேயே பயணிகள் இறக்கி விடப்படும் அவல நிலை உள்ளது. இதனால் குமுளியில் பேருந்துநிலையம் அமைக்கவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லை: குமுளி அடா்ந்த வனப்பகுதி மற்றும் வன விலங்குகள் அட்டவணைப்படுத்தப்பட்ட மரங்கள் உள்ள இடம் என்பதால் குமுளி பகுதியில் கழிப்பறை, குடிநீா், பயணியா் நிழற்குடை என அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்க நகராட்சி நிா்வாகத்தினருக்கு வனத்துறையினா் அனுமதியளிக்கவில்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் தொழிலாளா்கள், சுற்றுலா பயணிகள், பக்தா்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT