தேனி

ஆண்டிபட்டி விசைத்தறி ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறி ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேலும் இப்பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் சேலைகள் நெய்யும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றும் நெசவாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயா்வை வழங்க உரிமையாளா்கள் மறுத்ததால் கடந்த ஜன. 2 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 13 சதவீதம் ஊதிய உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து நெசவாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு 50 சதவீத ஊதிய உயா்வு வழங்குவது குறித்த பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் புதன்கிழமை முதல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT