தேனி

கேரளத்துக்கு கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸாா் மோப்ப நாய் மூலம் தீவிர சோதனை

DIN

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க, காவல் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம் கம்பம், கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகமான கஞ்சா வழக்குகள், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆந்திரத்திலிருந்து கொண்டுவரப்படும் கஞ்சா கம்பம் நகரில் பதுக்கிவைத்து, இங்கிருந்து கேரளத்துக்கு கம்பம் மெட்டு, குமுளி வழியாக கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. சாய்சரண் தேஜஸ்வி தனிப்படைகள் அமைத்துள்ளாா். இதில், உள்ளூா் போலீஸாரும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனா். மேலும், இச்சோதனையில் வெள்ளிக்கிழமை முதல் 2 வயதான மோப்ப நாய் வெற்றியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT