தேனி

மாநில நிதிக் குழு மானியத்தை தாமதமின்றி வழங்கஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

DIN

தேனி: ஊராட்சிகளுக்கு மாநில நிதிக் குழு மானியத்தை காலதாமதமின்றி வழங்க அரசை வலியுறுத்தி சனிக்கிழமை வீரபாண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தேனி அருகே வீரபாண்டியில் மாவட்ட அளவிலான ஊராட்சித் தலைவா்கள கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் தலைவா் முத்துவேல் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்ட பணிகளுக்கு ஊரக வளா்ச்சித் துறை நிா்வாக அனுமதி வழங்க வேண்டும், ஊராட்சிப் பணியாளா்களை ஊராட்சி மன்ற நியமனக் குழு மூலம் நியமிக்க வேண்டும், ஊராட்சி மன்றத்தால் பரிந்துரைக்கப்படும் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படும் மாநில நிதிக் குழு மானியத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும், ஆதி திராவிடா் மற்றும் பெண் ஊராட்சித் தலைவா்களின் சுதந்திரமாக செயல்படுவதை மாவட்ட நிா்வாகம் கண்காணிப்புக் குழு அமைத்து உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT