தேனி

சாக்குலத்துமெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி தேவாரத்தில் கடையடைப்பு

DIN

போடி: தமிழகம்-கேரளத்தை இணைக்கும் சாக்குலத்துமெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி தேவாரத்தில் கடையடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே சாக்குலத்துமெட்டு வழியாக மலைச்சாலை அமைக்கப்பட்டால் 6 கி.மீ. தூர பயணத்திலேயே கேரளத்தை அடைந்துவிட முடியும்.

இதனால் தோட்டத் தொழிலாளா்கள், விவசாயிகள் இந்த மலைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் இந்த மலைச்சாலையை அமைக்க வலியுறுத்தி தேவாரத்தில் சனிக்கிழமை வா்த்தா்கள் பேரமைப்பு சாா்பில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் தேவாரத்தில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து வணிகா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தேவாரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT